Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டம்

வாசிப்புநேரம் -

இந்தோனேசியவின் மேற்கு சுமத்ராவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடுகளைக் கட்ட திட்டங்கள் வரையப்படுகின்றன.

மேற்கு பசமானில் (Pasaman) நிகழ்ந்த 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்படும் மேம்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குச் சுமார் 42 டாலர் (சுமார் 57 வெள்ளி) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் இந்தோனேசியாவின் மேற்கு பசமானை நிலநடுக்கம் உலுக்கியதில் 4,800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

11,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்