இந்தோனேசியச் சுனாமி: மாண்டோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சுனாமியால் மாண்டோரின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

படம்: AP
இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சுனாமியால் மாண்டோரின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.
150க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாகவும், 16,000க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளதாகவும் பேரழிவுக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கடற்கரையோரங்களில் மீண்டும் பேரலைகள் எழலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அனக் கிரக்கட்டாவ் எரிமலை தொடர்ந்து சாம்பலைக் கக்கி வருகிறது.