Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

செம்பனை எண்ணெய்ப் பொருள்களின் ஏற்றுமதிகள் அனைத்தையும் தடை செய்துள்ள இந்தோனேசியா

வாசிப்புநேரம் -
செம்பனை எண்ணெய்ப் பொருள்களின் ஏற்றுமதிகள் அனைத்தையும் தடை செய்துள்ள இந்தோனேசியா
படம்: AFP/Wahyudi

இந்தோனேசியா, அதன் செம்பனை எண்ணெய்ப் பொருள்களின் ஏற்றுமதிகள் அனைத்தையும் தடை செய்வதாக அறிவித்திருக்கிறது.

உலகிலேயே ஆக அதிகமான செம்பனை எண்ணெயைத் தயாரிக்கும் நாடு இந்தோனேசியா.

அந்தத் தடை இன்று (28 ஏப்ரல்) முதல் நடப்புக்கு வருகிறது.

அதன் ஏற்றுமதிக் கொள்கைகளில் திடீரென இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க அந்த முடிவு எடுக்கப்பட்டது.

நோய்ப்பரவல், உக்ரேன் போர் ஆகிய காரணங்களால் உலக அளவில் உணவு விலைகள் அதிகரித்துள்ளன.

இதற்கு முன்னதாக, இந்தோனேசிய அரசாங்கம் செம்பனை எண்ணெயின் ஏற்றுமதித் தடை முழுமையாகச் செயல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தது.

உலக அளவில் செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் இந்தோனேசியா 55 விழுக்காட்டுப் பங்கு வகிக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்