இந்தோனேசியச் சுனாமி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ சிங்கப்பூர் மனிதநேய அமைப்புகளின் நன்கொடைத் தளங்கள்
சிங்கப்பூரில் உள்ள மனிதநேய அமைப்புகள், இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) கடலோரப் பகுதியில் நேர்ந்த சுனாமிப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, நன்கொடைத் தளங்களை அமைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள மனிதநேய அமைப்புகள், இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) கடலோரப் பகுதியில் நேர்ந்த சுனாமிப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, நன்கொடைத் தளங்களை அமைத்துள்ளனர்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Mercy Relief ஆகியவை அவற்றுள் அடங்கும்.
அந்த அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளின் வழி, நேற்றைய (டிசம்பர் 25) நிலவரப்படி, இணையம் வழி மட்டும் குறைந்தது 27,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமிப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பொருட்கள் வாங்கவும், நீண்டகால மறுநிர்மாண முயற்சிகளுக்குக் கை கொடுக்கவும், அந்த நிதிகள் பயன்படுத்தப்படும் என்று அமைப்புகள் கூறின.