Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலநடுக்கம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: EMSC

இந்தோனேசியாவின் ஜாவா (Java) தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேதத்தை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

பான்டென் (Banten) வட்டாரத்தில் நேர்ந்த நிலநடுக்கத்தால், பல வீடுகள் சேதமடைந்தன. சுனாமி அபாயம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இந்தியப் பெருங்கடலில், பான்டெனுக்கு தென்மேற்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 6.6ஆகப் பதிவான அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியில் ஆய்வு நிலையம் கூறியது.

என்றாலும், தலைநகர் ஜக்கர்த்தாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.

ஒரு நிமிடத்துக்கு மேல், கட்டடங்கள் அதிர்ந்ததால் பலர் அவற்றைவிட்டு வெளியே ஓடினர்.

மேற்கு ஜாவா, லாம்ப்புங் (Lampung) வட்டாரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa