Skip to main content
மராப்பி எரிமலை வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

மராப்பி எரிமலை வெடிப்பு - 12 பேரைத் தேடும் பணி தொடர்கிறது

வாசிப்புநேரம் -
மராப்பி எரிமலை வெடிப்பு - 12 பேரைத் தேடும் பணி தொடர்கிறது

(படம்: Reuters/Antara Foto/Septiyadi)

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மராப்பி எரிமலை வெடிப்பில் காணாமல்போன 12 பேரைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது.

நேற்று (4 டிசம்பர்) மீண்டும் சிறிய அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அந்த 12 மலையேறிகளையும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் 11 மலையேறிகளின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.

இதர மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பாக சுமார் 50 மலையேறிகள் எரிமலையில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் பலர் தீப்புண் காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

எரிமலை தொடர்ந்து அபாயகரமான நிலையில் இருப்பதால் அதன் 3 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்