Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படும்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படும்

(படம்: AFP/Sonny Tumbelaka)

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) கூறியுள்ளார்.

அது திங்கட்கிழமை (மே 23) நடப்புக்கு வரும்.

சமையல் எண்ணெயின் சராசரி விலை குறைந்துவரும் நிலையில் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவதற்குமுன், மொத்தமாக விற்கப்படும் சமையல் எண்ணெயின் விலை லிட்டருக்கு 19,800 ரூபியாவாக (1.87 வெள்ளி) இருந்தது.

விலை தற்போது 17,200 ரூபியாவுக்கும் 17,600 ரூபியாவுக்கும் இடைப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெய்த் துறையில் பணியாற்றும் 17 மில்லியன் ஊழியர்களைக் கருத்தில்கொண்டு தடையை நீக்க முடிவெடுத்ததாக அதிபர் விடோடோ சொன்னார்.

விலைகள் கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்வதற்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியா உலகின் ஆகப்பெரிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதி நாடு.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa