Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெளிநாட்டு வருகையாளர்களுக்கான தனிமைப்படுத்தும் நடைமுறையைத் தளர்த்துகிறது இந்தோனேசியா

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு வருகையாளர்களுக்கான தனிமைப்படுத்தும் நடைமுறையைத் தளர்த்துகிறது இந்தோனேசியா

படம்: AFP

இந்தோனேசியா வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்குமான தனிமைப்படுத்தும் நடைமுறையைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

அந்த மாற்றம் உடனடியாக நடப்புக்கு வருவதாக அந்நாட்டுச் சுற்றுப்பயணத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

எனவே இந்தோனேசியா முழுவதும் உள்ள எல்லா நகரங்களுக்கும் அந்தச் சலுகை விரிவுபடுத்தப்படுவதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்தது.

பாலி, பாத்தாம், பிந்தான் (Bali, Batam, Bintan) தீவுகளுக்குச் செல்லும் தடுப்பூசி போட்டு முடித்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து அது மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்.... 

'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்