Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்ப் பயணிகளுக்காக, பிந்தான், பாத்தாம் தீவுகளைத் திறக்கும் திட்டம் வெற்றியடையும் - இந்தோனேசியா நம்பிக்கை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்காக பிந்தான், பாத்தாம் (Bintan, Batam) தீவுகளைத் திறக்கும் திட்டம் வெற்றியடையும் என்று இந்தோனேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்காமல் இருந்தால், தீவுகளிலுள்ள மற்ற இடங்களுக்கும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என ரியாவ் தீவு (Riau Islands) ஆளுநர் CNAயிடம் கூறினார்.

இருப்பினும், திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் சிங்கப்பூர்ப் பயணிகள் தீவுகளுக்குச் செல்லாமல் உள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து பிந்தான், பாத்தாம் தீவுகளுக்கு வரும் பயணிகளுக்கான சிறப்புப் பயண ஏற்பாட்டைச் சென்ற மாதம் 24ஆம் தேதி இந்தோனேசியா அறிவித்திருந்தது.

ஆனால், சிங்கப்பூருக்குத் திரும்பும் பயணிகள் 7 நாள்களுக்குத் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால், தீவுகளுக்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர்ப் பயணிகள் விசா அனுமதி பெறத் தேவையில்லை என்று அறிவித்தது இந்தோனேசியா.

அவர்கள் அதிகபட்சம் 14 நாள்களுக்கு தீவுகளில் தங்கலாம்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்