Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தண்ணீரைச் சூடாக்கும் சாதனத்தின் கோளாற்றால் மாண்ட இந்தோனேசியக் குடும்பமும் உதவியாளரும்

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் ஒரு குடியிருப்பு வீட்டில் குளியல் நீருக்கு வெப்பமூட்டும் water heater சாதனத்தில் கோளாறு ஏற்பட்டதால் மூவர் அடங்கிய குடும்பமும் அவர்களின் உதவியாளரும் மாண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 மார்ச்) மாலை 6 மணிவாக்கில் கிழக்கு ஜக்கர்த்தாவின் புலோ காடுங் (Pulo Gadung) வட்டாரத்தில் 29 வயதுப் பெண் ஒருவர் தமது
11 மாதக் குழந்தையைக் குளிப்பாட்ட வெப்பமூட்டும் சாதனத்தை இயக்கினார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்தச் சாதனத்தில் கோளாறு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்து இருவரும் மாண்டனர்.

இருவரும் அலறுவதைக் கேட்ட அந்தப் பெண்ணின் 37 வயதுக் கணவரும் 59 வயது உதவியாளரும் குளியலறைக்கு விரைந்தனர்.

ஆனால் மின்சாரம் பாய்ந்து அவர்களும் மாண்டனர்.

வீட்டில் இருந்த பணியாளரின் சகோதரர் அவர்கள் அலறுவதைக் கேட்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வெப்பமூட்டும் சாதனத்துக்கான மின்சாரக் கம்பி உருகியிருந்ததைக் கண்டனர்.

மாண்டோரின் மரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

ஆதாரம் : Others/8world

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்