Skip to main content
மராப்பி எரிமலை மீண்டும் வெடித்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

மராப்பி எரிமலை மீண்டும் வெடித்தது

வாசிப்புநேரம் -
மராப்பி எரிமலை மீண்டும் வெடித்தது

(படம்: Reuters/Antara Foto/Iggoy el Fitra)

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மராப்பி (Marapi) எரிமலை இன்று மீண்டும் வெடித்தது.

6 வாரங்களுக்கு முன்பு அது வெடித்தபோது 23 பேர் மாண்டனர்.

அதிலிருந்து 1,300 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெளியானதாக அந்நாட்டின் புவியியல் நிறுவனம் தெரிவித்தது.

இன்று அதிகாலை இருமுறை எரிமலை வெடித்தது.

எரிமலைக்கு 4.5 கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

எரிமலை வெடித்ததால் சாம்பல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதை நுகரும்போது ஏற்படக்கூடிய சுவாச நோய்களைத் தடுக்க முகக்கவசங்களை அணியும்படி புவியியல் நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டது.

குடியிருப்பாளர்கள் சுவாசப் பரிசோதனைக்காகச் சுகாதார நிலையங்களுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்