Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெட்ரோனாசுக்கும் அனைத்துலக எண்ணெய், எரிவாயு நிறுவனத்துக்கும் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடி விசாரணை

வாசிப்புநேரம் -
மலேசியாவின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசும் (Petronas) அனைத்துலக எண்ணெய், எரிவாயு நிறுவனம் ஒன்றும் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடி விசாரிக்கப்படுகிறது.

அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு ஆணையம் அதனைத் தெரிவித்தது.

விசாரணையில் பெட்ரோனாஸ் முழுமையாய் ஒத்துழைப்பதாக ஆணையம் கூறியது.

சரவாக் மாநிலத்தில் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் பெறுமான திட்டத்தை ஆணையம் விசாரித்து வருகிறது.

அது என்ன திட்டம் என்பதையும் அனைத்துலக நிறுவனம் எது என்பதையும் ஆணையம் இன்னும் அடையாளம் காணவில்லை.

பெட்ரோனாஸ் உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை.

நடைமுறைகள், கட்டமைப்புகள், வேலைச் செயல்முறைகள் முதலியவற்றில் சில குறைபாடுகளைக் கண்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆணையம் வழக்கமான செயல்முறைகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

விவரம் அறிந்தவர்களைப் புலனாய்வில் உதவ முன்வரும்படி அது கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்