சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏழாண்டுகளாக இருந்த விரிசலைச் சீனா தீர்த்துவைத்தது
வாசிப்புநேரம் -
(படம்: Luo Xiaoguang/Xinhua via AP)
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டிருந்த விரிசல் சீனாவின் உதவியுடன் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கில் பெருகும் பெய்ச்சிங்கின் ஆதிக்கத்தை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஏழாண்டுகள் பிளவுபட்டிருந்த உறவை சவுதி அரேபியாவும் ஈரானும் புதுப்பித்துக்கொண்டுள்ளன.
இருநாடுகளும் மீண்டும் அதனதன் தூதரகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளன.
இருபதாண்டுக்குமுன் கையெழுத்தான பாதுகாப்பு, பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவும் இருதரப்பும் இணங்கின.
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான விரிசலைச் சரிசெய்ய சீனா எந்தளவுக்குப் பங்காற்றியது என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமரசப் பேச்சுக்கு வாஷிங்கடனைவிடப் பெய்ச்சிங்கை இனி அதிகமானோர் நாடக்கூடிய சாத்தியமும் எழுந்துள்ளது.
மத்தியக் கிழக்கின் வருங்காலம் வட்டார நாடுகளின் கையிலிருப்பதாகச் சீனா நம்பிக்கை தெரிவித்தது.
வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் பிற நாடுகளுடன் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் களையவும் மத்தியக் கிழக்கு சுயமாகச் செயல்பட சீனா கைகொடுக்கும் என்றும் அது கூறியது.
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
பல்லாண்டாக மத்தியக் கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவிற்கு இது பேரிடியாய் அமைந்துள்ளது.
ரஷ்ய-உக்ரேனியப் போரைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்டுள்ளது அமெரிக்கா.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் அதன் செல்வாக்கை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தற்போது கவனம் செலுத்துகிறது.