Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானைவிட்டுப் புறப்படும் பாண்டாக்களுக்குப் பிரியாவிடை

வாசிப்புநேரம் -
ஜப்பான் முக்கியமான நால்வரைச் சீனாவிற்குத் திருப்பி அனுப்பவிருக்கிறது....

அவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்க ஏராளமான போட்டி.

ஒயேனோ (Ueno) விலங்குத் தோட்டத்தில் 2017இல் பிறந்தது சியாங் சியாங் (Xiang Xiang) பாண்டா கரடி.

ஜப்பானிய மண்ணில் கிட்டத்தட்ட 30 ஆண்டுக்குப் பிறகு பிறந்த செல்லக்குட்டி.

அதனாலேயே இதற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

சீனாவிற்குத் திரும்ப அனுப்பிவைக்கப்படும் 4 பாண்டா கரடிக் குட்டிகளில் இதுவும் ஒன்று.

இதற்குப் பிரியாவிடை கொடுக்க 2,600 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குலுக்கல் முறையில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

உள்ளே சென்று பார்க்கமுடியாவிட்டால் என்ன?

வெளியிலிருந்தவாறே விடை கொடுத்தனர் ஏராளமானோர்.

சியாங் சியாங் சுவாசித்த அதே காற்றைச் சுவாசித்ததே போதும் என்றனர் சிலர்.

இமே (Ei-mei) பாண்டா கரடியும் அதன் இரட்டை மகள்களும் தாயகம் திரும்பவிருக்கும் பிற பாண்டாக்கள்.

இமே 16 பாண்டா கரடிகளின் தந்தை.

28 வயதில், உலகின் ஆக மூத்த தந்தை என்ற பட்டப் பெயர் கொண்டது அது.

மனிதர்களின் வயதில் அது 80க்குச் சமம்.

சீனா நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாண்டா கரடிகளை பிறநாடுகளுக்கு இரவலாகக் கொடுப்பது வழக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்