Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கும் ஜப்பான்... COVID-19 நோய்த்தொற்று கட்டுக்குள் வருமா?

வாசிப்புநேரம் -

ஜப்பான் COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கவுள்ளது.

வேகமாகப் பரவிவரும் ஓமக்ரான் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தப் போராடும் ஜப்பான் புதிய கட்டுப்பாடுகளை தோக்கியோ உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமல்படுத்தவுள்ளது. 

13 வட்டாரங்களில் பகுதியளவு அவசரநிலை நடைமுறைக்கு வரலாம். அதற்கான ஒப்புதலை இன்று பின்னேரத்தில் ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நடவடிக்கை ஒவ்வொரு வட்டாரமும் எத்தகைய நடிவடிக்கையைப் பின்பற்றவுள்ளது என்பதை முடிவு செய்யும். 

மதுக்கூடங்கள், உணவகங்கள் போன்றவை குறிப்பிட்ட மணிநேரம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.  

அநேகமாய் மதுபான விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது

ஜப்பானில் முதல்முறையாக நாள்தோறும் 30,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்