Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் அதிகரிக்கும் ஓமக்ரான் கிருமிப்பரவல் - தோக்கியோவில் கடுமையாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

வாசிப்புநேரம் -

ஜப்பானில் ஓமக்ரான் கிருமிப்பரவல் அதிகரிப்பதால், தோக்கியோவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை அடுத்த வாரம் 9,500-ஐத் தொடக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.  

நான்கு மாதங்களில் இல்லாத அளவு, தோக்கியோவில் 2,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 

என்றாலும், ஓமக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களைத்  தனிமைப்படுத்தும் காலத்தை இரண்டு வாரத்திலிருந்து குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. 

மருத்துவக் கட்டமைப்பின் சுமையையும், சமூக இடையூறுகளையும் குறைக்க அது உதவும் என்று கருதப்படுகிறது. 

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa