Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஓர் இரவு வெளியே சென்றார்... நகரவாசிகளின் தகவல்கள் தொலைந்தன...

வாசிப்புநேரம் -
ஓர் இரவு வெளியே சென்றார்... நகரவாசிகளின் தகவல்கள் தொலைந்தன...

(படம்: Polina Zimmerman/Pexels)

ஜப்பானின் அமகாசாகி (Amagasaki) நகரில் வசிக்கும் 460,000 குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொலைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவல்கள் கொண்ட Thumbdrive சாதனத்தை ஊழியர் ஒருவர் தொலைத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

அவர் வேலை முடிந்து மதுபானம் அருந்தச் சென்றபோது அந்தச் சாதனம் இருந்த பையைத் தொலைத்துவிட்டார்.

நகரவாசிகள் அனைவரின் பெயர், பாலினம், வீட்டு முகவரி, பிறந்தநாள் எனப் பல தகவல்கள் அந்தச் சாதனத்தில் உள்ளன.

அந்தத் தவற்றுக்கு நகரின் அதிகாரி ஒருவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அந்தத் தகவல்களை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்காக அது சாதனத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எனினும், சாதனத்தில் உள்ள தகவல்கள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதுவரை அந்தத் தகவல்களை யாரேனும் பெற்றதாக அறிகுறி ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa