Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2ஆம் உலகப் போருக்குப்பின் முதல்முறையாக ஆகப்பெரிய அளவில் தற்காப்புச் செலவை உயர்த்தும் ஜப்பான்

வாசிப்புநேரம் -

ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதல்முறையாக ஆகப்பெரிய அளவில் தற்காப்புச் செலவை உயர்த்தவிருக்கிறது. 

அதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் தர ஜப்பானிய அரசாங்கம் தயாராகி வருகிறது. 

புதிய நிலவரப்படி உலகிலேயே தற்காப்புக்காக ஆக அதிகமாகச் செலவிடும் நாடுகளின் வரிசையில் ஜப்பான் இடம்பெறும். 

பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த ஐந்தாண்டில் தற்காப்புச் செலவை இரண்டு மடங்காக்கும்படி அமைச்சரவையைக் கேட்டிருக்கிறார். 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காட்டைத் தற்காப்புக்காகச் செலவிடுவது திட்டம். 

தற்போது ஜப்பான் ஆண்டுக்குச் சுமார் 43 பில்லியன் டாலரைத் தற்காப்புக்குச் செலவிடுகிறது. 

உலக அளவில் பதற்றம் அதிகரிப்பதால் அதற்கு ஏற்பத் தற்காப்புச் செலவை உயர்த்த ஜப்பான் எண்ணுகிறது.

வரும்முன் காக்கவும்,  திடீர் ஆபத்துகளைத் தடுக்கவும் கூடுதல் பணம் உதவும் என்று அதிகாரிகள் கூறினர். 

ஏவுகணைத் தற்காப்பை வலுப்படுத்தவும் ஜப்பான் விரும்புகிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்