Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புகை வெடிகுண்டுச் சம்பவம்: பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய ஜப்பானியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
புகை வெடிகுண்டுச் சம்பவம்: பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய ஜப்பானியப் பிரதமர்

(படம்: Kazuhiro NOGI / AFP))

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) தமது பிரசார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளார்.

இதற்குமுன்னர் திரு. கிஷிடா உரையாற்றவிருந்த வக்காயாமா (Wakayama) துறைமுகத்தில், புகை வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தை அடுத்துத் திரு. கிஷிடா அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பேச அவர் அங்குச் சென்றிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.

"இதற்குமுன் சென்றிருந்த பகுதியில் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. அதனைக் காவல்துறை விசாரித்து வருகிறது. அந்தச் சம்பவத்துக்காக நான் வருந்துகிறேன். மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று திரு. கிஷிடா சொன்னார்.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பில் 24 வயது ஆடவர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வக்காயாமா காவல்துறை AFP இடம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்