Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் 10இல் ஒருவர் 80 வயதைக் கடந்தவர்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் முதல்முறையாக 10இல் சுமார் ஒருவர் 80 வயதைக் கடந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

ஜப்பானின் மக்கள்தொகை 125 மில்லியன்.

65 வயதுக்கு மேற்பட்டோர்: 29.1 விழுக்காடு

உலகின் ஆக மூத்த மக்கள்தொகையைக் கொண்ட நாடு ஜப்பான் என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதற்கு அடுத்த நிலையில் இத்தாலியும் பின்லந்தும் உள்ளன.

2040ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் 65 வயதைக் கடந்தவர்களின் விகிதம் சுமார் 35 விழுக்காட்டை எட்டிவிடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கும் சூழலில் குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் ஜப்பானின் முயற்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

சென்ற ஆண்டு அங்கு 800,000க்கும் குறைவான குழந்தைகள் பிறந்தன.

ஒப்புநோக்க, 1970களில் ஜப்பானில் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பிறந்தன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்