Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரிய வேவுத் துணைக்கோளத்தைச் சுட்டு வீழ்த்தத் தயாராகும் ஜப்பான் ராணுவம்

வாசிப்புநேரம் -
வடகொரிய வேவுத் துணைக்கோளம் தனது எல்லைக்குள் வந்தால் அதனைச் சுட்டு வீழ்த்தத் தயாராகுமாறு ஜப்பான் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் யாசுகாஸு ஹாமாடா (Yasukazu Hamada) அதனைத் தெரிவித்தார்.

வடகொரியப் புவி ஈர்ப்பு ஏவுகணைகளை அழிப்பதற்கு அவர் உத்தரவிடக்கூடுமெனத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

அதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யுமாறு அவர், ஜப்பானியத் தற்காப்புப் படைக்கு உத்தரவிட்டார்.

ஆக்கினாவா (Okinawa) தீவுக்குத் துருப்பினரை அனுப்புவதும் அதில் அடங்கும்.

வடகொரியாவின் முதலாவது வேவுத் துணைக்கோளத்தைப் பாய்ச்சுவதற்கான ஆயத்தவேலைகள், திட்டமிட்டபடி தொடங்க வேண்டுமென அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) அண்மையில் கூறியிருந்தார்.

அமெரிக்கா, தென்கொரியா ஆகியவற்றிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அது அவசியம் என்று அவர் கருதுகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்