Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் - 13 பேர் காயம்

வாசிப்புநேரம் -

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை உலுக்கிய 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 13 பேர் காயமுற்றனர். 

அவர்களில் இருவர் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 

கியூஷூ ( Kyushu) கரைக்கு அப்பால் இன்று அதிகாலையில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. 

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

ஒயிட்டா, மியாஸாக்கி (Oita, Miyazaki) மாநிலங்களிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. 

நிலநடுக்கத்தால் கட்டடங்கள், நீர்க்குழாய்கள், சாலைகள் முதலியவையும் சேதமுற்றதாக NHK ஊடகம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்