Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவிலிருந்து ஜப்பான் செல்லும் பயணிகளுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை

வாசிப்புநேரம் -
சீனாவிலிருந்து ஜப்பான் செல்லும் பயணிகளுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை

(படம்: Richard A. Brooks / AFP)

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அதன் எல்லை நடவடிக்கைகளைக் கடுமையாக்கவிருக்கிறது.

சீனாவில் அதிகரிக்கும் நோய்ப்பரவலால் அவ்வாறு செய்யப்படுகிறது.

சீனாவிலிருந்து வருவோர் அல்லது அங்கு கடந்த 7 நாட்களில் சென்றிருந்தோர் ஜப்பானுக்குச் சென்றவுடன், கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

கிருமி தொற்றியிருப்பதாக அடையாளம் காணப்படுவோர் ஜப்பானில் 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

வரும் வெள்ளிக்கிழமை (30 டிசம்பர்) நள்ளிரவுக்குப் பின்னர் அந்தப் புதிய நடவடிக்கைகள் ஜப்பானில் நடப்புக்கு வரும்.

சீனாவுடனான விமானச் சேவைகளைக் கட்டுப்படுத்தவும் ஜப்பான் திட்டமிடுகிறது.

அக்டோபரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வரவேற்க ஜப்பான் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்தது.

நோய்ப்பரவலுக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் சீனாவிலிருந்தே ஆக அதிகமான சுற்றுப்பயணிகள் ஜப்பானுக்குச் சென்றிருந்தனர்.

அண்மையில் சீன அரசாங்கம் வெளியிடும் நோய்ப்பரவல் விவரங்களுக்கும் தனியார் துறை வெளியிடும் தகவல்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. 

அதனால் சீனாவின் நோய்ப்பரவல் நிலவரம் குறித்து பல அக்கறைகள் எழுந்துள்ளன.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்