Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தவறுதலாக வழங்கப்பட்ட 360,000 டாலர்... திருப்பிக்கேட்டால் எப்படிக் கொடுப்பது...

வாசிப்புநேரம் -

ஜப்பானில் ஓர் ஆடவருக்குத் தவறுதலாக 360,000 டாலர் COVID-19 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகையைத் திருப்பிக்கேட்டால் செலவாகிவிட்டது என்கிறார் அந்த 24 வயது ஆடவர்.

மேற்கு ஜப்பானில் உள்ள அபூ என்ற ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது.

அந்த ஆடவர் பணத்தையெல்லாம் சூதாடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பணத்தைத் திரும்பிப்பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

அந்த ஆடவர்மீது வழக்கும் தொடுத்துள்ளனர்.

தற்போது கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவ்வளவு பெரிய தொகையை அவரால் திருப்பிச் செலுத்தமுடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆடவர் பணத்தைத் திருப்பிக்கொடுக்க ஒப்புக்கொண்டாலும் வழக்கை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என அபூவின் மேயர் கூறினார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்