Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் உருவாக்கப்பட்ட சுண்டெலிகளுக்கு 2 அப்பாக்கள்

வாசிப்புநேரம் -

ஜப்பானிய ஆய்வாளர்கள் ஆண் சுண்டெலியின் உயிரணுக்களைக் கொண்டு முதன்முறையாகக் கருமுட்டையை உருவாக்கியுள்ளனர்.

அந்தக் கருமுட்டையிலிருந்து 7 சுண்டெலிகள் பிறந்துள்ளன. இதுவொரு புரட்சிகரமான ஆய்வு என வருணிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியை மனிதர்களிடையே பயன்படுத்தச் சில காலம் ஆகலாம் என்றாலும் ஆய்வின் வாயிலாகப் பெண்ணின் கருமுட்டைகள் இன்றி ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சாத்தியம் வெளிப்பட்டுள்ளது.

Nature எனும் சஞ்சிகையில் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

Osaka, Kyushu பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உயிரியலாளர் கட்ஸுஹிக்கோ ஹயாஷி (Katsuhiko Hayashi) குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.

இதற்குமுன் பெண் எலியின் தோலிலுள்ள உயிரணுக்களை எடுத்து அதிலிருந்து குஞ்சுகள் வரக்கூடிய கருமுட்டைகளை உருவாக்கினர்.

அதே வழிமுறை மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

மனிதர்களைப் போலவே ஆண் சுண்டெலிக்கு X, Y குரோமோசோம்கள் (chromosome) உண்டு. பெண் சுண்டெலிக்கு 2 X குரோமோசோம்கள் உள்ளன.

ஆய்வின்போது, ஆண் எலியினுடைய வாலின் தோலிலுள்ள உயிரணுக்களை எடுத்து அதனை சுயமாகப் புதுப்பிக்கக்கூடிய உயிரணுக்களாக மாற்றினர்.

எனினும் அந்த முயற்சியின்போது 6 விழுக்காட்டு உயிரணுக்கள் அவற்றின் Y குரோமோசோம்களை இழந்தன. இதனால் அவற்றில் X குரோமோசோம்கள் மட்டுமே இருந்தன. அது XO என்று வழங்கப்படும்.

அந்த X குரோமோசோமை வைத்து அதிலிருந்து நகல் எடுக்கப்பட்டு XX குரோமோசோம்கள் உருவாக்கப்பட்டன.

அந்த XX உயிரணுக்கள் வாயிலாக கருமுட்டைகள் உருவாக்கப்பட்டன. வாடகைத் தாய் உத்தியைப் பயன்படுத்தி பெண் சுண்டெலிக்குள் அவை புகுத்தப்பட்டன.

சுமார் 630 முயற்சிகளுக்குப் பிறகு, 7 எலிக்குஞ்சுகள் பிறந்தன.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்