Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வீழ்ச்சிகண்டுவரும் பிறப்பு விகிதத்தைத் தடுத்துநிறுத்த முன்னுரிமை அளிக்கும் ஜப்பானிய அரசாங்கம்

வாசிப்புநேரம் -
ஜப்பானிய அரசாங்கம் வீழ்ச்சிகண்டுவரும் பிறப்பு விகிதத்தைத் தடுத்துநிறுத்த முன்னுரிமை அளித்துள்ளது.

சென்ற ஆண்டு அங்கு 800,000க்கும் குறைவான குழந்தைகளே பிறந்தன.

குழந்தைப் பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கை.

ஜப்பானின் மொத்த மக்கள்தொகை 125 மில்லியன்.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் நாடு ஒரு சமுதாயமாகத் தொடரமுடியுமா என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்று பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) கவலை தெரிவித்தார்.

குடும்பங்களுக்கு நிதியுதவி, குழந்தைப் பராமரிப்பு வசதிகள், கூடுதல் பெற்றோர் விடுப்பு உள்ளிட்ட கொள்கைகள் மேம்படுத்தப்படும் என்று அவர் உறுதிகூறினார்.

குறைவான பிறப்பு விகிதத்தால் பல வளர்ந்த நாடுகள் சிரமப்படுகின்றன.

ஆனால் பிரச்சினை ஜப்பானில் கடுமையாக உள்ளது.

மக்கள்தொகையில் முதியோரின் விகிதம் அதிகமுள்ள நாடுகளில் மொனாக்கோவுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் ஜப்பான் உள்ளது.

கடுமையான குடிநுழைவுக் கொள்கைகளின் காரணமாக, அங்கு ஊழியர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்