தென்கொரியத் தீவை நடுங்க வைக்கம் கடுங்குளிர்

(படம்: Pixabay)
தென் கொரியாவின் பிரபல ஜேஜு (Jeju) தீவுக்கான சுமார் 500 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் மிகக் கடுமையான குளிர்காலம். சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் ஜேஜு தீவில் மோசமான பனிக் காற்று வீசுகிறது.
தெற்கே ஜேஜு, குவாங்ஜு (Gwangju) உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாகப் பனி பொழிகிறது. பலத்த காற்றும் வீசுகிறது.
கப்பல் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இன்று காலை சோலில் தட்பநிலை பூஜ்யத்திற்குக் கீழ் 16.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
வடக்கே சோர்வோன் (Cheorwon) பகுதியில் தட்பநிலை பூஜ்யத்திற்குக் கீழ் 25 டிகிரி செல்சியஸுக்குச் சரிந்தது.
தென் கொரியாவை உறையவைக்கும் குளிர் இந்த வாரம் முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.