Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் டுரியான் விலைகள் உயரக்கூடும்... வெள்ளத்தால்...

வாசிப்புநேரம் -
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மே மாத டுரியான் அறுவடை பாதிக்கப்படலாம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டுரியான்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையக்கூடும் என்றும் அதனால் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் சில டுரியான் வகைகளின் விலை அதிகரிக்கலாம் என்றும் பண்ணையாளர்கள் CNA-யிடம் கூறினர்.

இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பல டுரியான் மரங்களின் பூக்கும் பருவம் பாதிக்கப்பட்டதாக மலேசியப் பழமரப் பண்ணையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பிரான்சிஸ் ஹோங் (Francis Hong) குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெய்த மழையால் சில டுரியான் மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Mao Shan Wang, Red Prawn, Black Thorn ஆகிய டுரியான் வகைகளின் விலைகள் ஏற்றம் காணலாம் என்று கூறப்பட்டது.

மலேசியாவின் உச்ச டுரியான் பருவம் ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்ட் வரை நீடிக்கும்.
ஆதாரம் : CNA/am(as)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்