Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு?

வாசிப்புநேரம் -

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் நிர்வாகத் திறனையும், வெளிப்படைத் தன்மையையும் சோதித்துப் பார்க்கும் களமாக விளங்கப் போகிறது என்றால் அது மிகையில்லை. 

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத் தான் இம்முறை வெற்றி வாய்ப்பு அதிகம் எனலாம்.

தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது.

ஜொகூர் தேர்தலில், மக்களைக் குறிப்பாக இளைஞர்களைக் கவர்வதில் சமூக வலைத்தளங்கள் இம்முறை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அரசியல்-சமூக ஊடக ஆய்வாளர், இணைப் பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி சின்னசாமி. 

1

விஷயங்களைத் தெரிந்து கொள்ள இளையர்கள் பயன்படுத்தும் முக்கிய ஊடகமாகச் சமூக வலைத்தளங்கள் விளங்குகின்றன.

அம்னோ, தேசிய முன்னணி, Pakatan Harapan, Perikatan Nasional என எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கருத்துக்கள், திட்டங்கள், சேவைகள் பற்றிய தகவல்களை இளைஞர்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்க, Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைத்தளங்களையே தற்போது அதிகம் பயன்படுத்துவதாக டாக்டர் சரஸ்வதி கூறினார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் இருந்தே இளைஞர்களைக் கவர்வதற்கு அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் முக்கிய ஊடகமாக சமூக வலைத்தளங்கள் விளங்கி வருகின்றன, இம்முறை இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அவர்களை ஈர்க்க சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இன்னும் பெருகி விட்டது

என்றாரவர்.

ஒரு வார்த்தை தவறாகப் பேசி விட்டாலும் போதும், பாதிப்பு பெரிதாக இருக்கும்.

தேர்தலின் போது சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்வது போல் இல்லை என்கிறார், சட்டத்துறை மாணவி நூர் ஆஷிக்கின் ஷஃபீக்கா.  (Noor Asyikin Shafiqah). 

2

எல்லாத் தகவல்களும் விரல் நுனியில் இருப்பதால், ஒரு வார்த்தை தவறாகக் கூறினாலும் அதுபெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்கிறார் அவர். 

ஜொகூர் பாருவில் வசிக்கும் 23 வயது நூர் ஆஷிக்கின், தேர்தலில் வாக்களிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் சொன்னார். 

நான் என் மாநிலத்துக்காகச் செலுத்தவிருக்கும் முதல் வாக்கு இது. தேர்தல் சார்ந்த விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு வருகிறேன். 

நான் பெரும்பாலும் Facebookஐ விட Twitterஐத்தான் அதிகம் பயன்படுத்துவேன். 

மூடா(Muda) கட்சியின் தலைவர்  சைட் சாடிக் (Syed Saddiq) போன்றவர்கள் கூறும் விஷயங்கள், பெரும்பாலும் என்னைப் போன்ற இளைஞர்களை அதிகம் கவர்கின்றன.
 
ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Onn Hafiz bin Ghazi செய்யும் பணிகளையும் Twitter மூலமாகக் கவனித்து வருகிறேன்.

வேலை வாய்ப்பு, கல்விக் கடனுதவி போன்று மாணவர்கள்,  இளைஞர்களின் நலனில் அக்கறையுள்ளவர்களுக்கே எங்களின் வாக்கு

என்கிறார் நூர் ஆஷிக்கின்.

ஜொகூர் தேர்தல் பற்றிய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள்தான் உதவுகின்றன

சிங்கப்பூரில் வேலை செய்வதால் அஞ்சல் மூலமாக என் வாக்கைச் செலுத்தி விட்டேன். கடல் கடந்து வாழ்ந்தாலும் வாக்களிக்கும் என் கடமையை நிறைவேற்றி விட்டேன் என்பதில் மகிழ்ச்சி

என பெருமிதத்துடன் கூறினார் 23 வயது முகமட் அரிஃபின் (Muhamad Ariffin). 

3

ஜொகூர் தேர்தல் பற்றிய அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தெரிந்து கொள்கிறேன். அவ்வகையில் சற்று முன்னர் கூட திரு.

அன்வார் இப்ராஹிமின் ஜொகூர் மாநில தேர்தல் பற்றிய உரை YouTubeபில் வெளியாகியிருந்தது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தோஸ்ரின் ஜர்வந்தி (Tosrin Jarvanthi) எனும் 72 வயது வேட்பாளரும் போட்டியிடுகிறார். 

அவரது நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். இதுபோல் சமூக வலைத்தளத்தில் வரும் எல்லாத் தகவல்களையும் பார்த்து விடுவேன். ஆனால் இறுதி முடிவு எனது சொந்த முடிவாகவே இருக்கும்” என்றார் முகமட் அரிஃபின்.
மக்களுக்குச் சேவையாற்றும் தலைவர்கள் வேண்டும்

“என் பெயர் தேவி துர்கா குமரேசன். வயது 19. ஜொகூர் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கவிருக்கிறேன். பதற்றமாக உள்ளது."

அதேசமயம் மலேசியக் குடிமகளாக என் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என்ற பெருமிதமும் இருக்கிறது.

4

பெரும்பாலும் Facebook மூலமாக தேர்தல் நிலவரங்களைத் தெரிந்து கொள்வேன். தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் இத்தொகுதி அரசியல் தலைவர்கள், மக்களுக்கு ஆற்றி வரும் சேவையைத் தொடர வேண்டும்

என்றார் தேவி துர்கா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்