Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரில் மழை - வெள்ள நிவாரண நிலையங்களில் 3,400க்கும் மேற்பட்டோர் தஞ்சம்

வாசிப்புநேரம் -
ஜொகூரில் மழை - வெள்ள நிவாரண நிலையங்களில் 3,400க்கும் மேற்பட்டோர் தஞ்சம்

படம்: Bernama

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெய்யும் கனத்த மழையால், 3,400க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (25 ஜனவரி) காலை 6 மணி நிலவரப்படி, சுமார் 3,480 பேர் தற்காலிகத் தங்குமிடங்களில் இருப்பதாக நாட்டின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.

நேற்று (24 ஜனவரி) நள்ளிரவுடன் ஒப்பிடுகையில் அங்கிருப்போர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 570 கூடியுள்ளது. 

ஜொகூரில் மட்டும் 35 வெள்ள நிவாரண நிலையங்கள் செயல்படுவதாய், Bernama செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கோத்தா திங்கி (Kota Tinggi), குளுவாங் (Kluang), மெர்சிங் (Mersing), செகாமட் (Segamat), பத்து பஹாட் (Batu Pahat) ஆகிய வட்டாரங்களில் கூடுதலாக 5 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

செகாமட் பகுதி வெள்ளத்தால் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 13 நிவாரண நிலையங்களில் ஏறக்குறைய 1,400 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்