Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் - களத்திலிருந்து நிலவரத்தைத் தரும் 'செய்தி' நிருபர்

மலேசியாவில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வகத்தார் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வகத்தார் தெரிவித்துள்ளனர்.

அதனால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள வெள்ள நிலவரத்தைப் பற்றிக் கூறுகிறார் 'செய்தி' நிருபர் தயாளன் சண்முகம்.

 கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது

தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தாமான் ஸ்ரீ மூடா பகுதி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

சுமார் 4,000 பேர் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த 4 நாள்களாக மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ள நீர் இன்னும் வடியாததால் மூத்தோர் பலர் சிரமப்படுகின்றனர்.

மக்களை மீட்கப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன 

என்றார் திரு தயாளன். 

மலேசியாவில் வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 19க்கு உயர்ந்திருக்கிறது.
மேலும் பலரைக் காணவில்லை.

நாடெங்கிலும் தேடல் மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடர்கின்றன.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 180 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்