Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பசி, பட்டினி... விறகு அடுப்புக்கும் வழியில்லை' - இலங்கையில் மக்கள் தவிப்பு

வாசிப்புநேரம் -
'பசி, பட்டினி... விறகு அடுப்புக்கும் வழியில்லை' - இலங்கையில் மக்கள் தவிப்பு

(படம்: AFP/Ishara S Kodikara)

இலங்கை அதன் வரலாற்றில் முதல்முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியிருக்கிறது.

2 வெளிநாட்டுக் கடன் பத்திரங்களுக்கு 78 மில்லியன் டாலரைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. 

எண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் மிகமோசமான பற்றாக்குறை நிலவுகிறது. 

அதனால் மக்கள் பசியில் அவதிப்படுவதாகக் கூறுகிறார் கொழும்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஜீவ சதாசிவம். 

 

பசி, பட்டினியால் நிறைய பேர் வீதிக்கு வந்துவிட்டனர். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் வசிப்போருக்கு  விறகு அடுப்பைப் பயன்படுத்தும் வசதியும் இல்லை. அதனால்தான் மக்கள் எரிவாயு வேண்டுமென்று கேட்கின்றனர்.

 

"தினமும் குறிப்பிட்ட அளவு எரிவாயு விநியோகிக்கப்படும் என அரசாங்கம் கூறினாலும், எரிவாயு வந்தபாடில்லை. இது இப்போது தீரக்கக்கூடிய பிரச்சினையாகத் தோன்றவில்லை"

என்று அவர் கூறினார்.

இலங்கையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர்ப் புகை கொண்டும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் கலைக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்