Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய ரயில் நிலையம்

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. 

பேங்காக்கில் உள்ள அந்தப் புதிய ரயில் நிலையத்தின் மூலம் வட்டாரப் போக்குவரத்து நடுவம் என்ற நிலையைத் தாய்லந்து வலுப்படுத்திக்கொள்ள முடியும். நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் அது பெரும்பங்களிக்கும். 

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணி பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. 

தாய்லந்துக்குள் உள்ள இடங்களுக்குச் செல்லும் நெடுந்தூர ரயில்களும் அனைத்துலக ரயில்களும் புதிய நிலையத்தைக் கடந்து செல்லும். 

மலேசிய எல்லையில் உள்ள தாய்லந்தின் சுங்கை கோலோக் (Sungai Kolok) நகருக்குப் புதிய நிலையத்திலிருந்து முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்