Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அவசர மருத்துவ உதவி வழங்கவேண்டும்"

வாசிப்புநேரம் -
மியன்மாரில், பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அவசர மருத்துவ உதவி வழங்குமாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

மன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விடுத்த கூட்டறிக்கை திருவாட்டி சூச்சியையும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியது.

78 வயதான திருவாட்டி சூச்சிக்கு ராணுவ அரசாங்கம் போதிய மருத்துவப் பராமரிப்பு வழங்கவில்லை என அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி, சென்ற வாரம் குற்றஞ்சாட்டி இருந்தது.

முன்னதாகத் திருவாட்டி சூச்சியின் மகன் தமது தாயின் பல் ஈறு பிரச்சினைக்கும் மயக்கத்துக்கும் சிகிச்சையளிக்க ராணுவம் மறுப்பதாகக் கூறியிருந்தார்.

அதை மறுத்த மியன்மார், திருவாட்டி சூச்சி நன்கு பார்த்துக்கொள்ளப்படுவதாகக் கூறியது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்