Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1... 2... 3... சிங்கங்களை ஏலம் விடும் பாகிஸ்தான் விலங்கியல் தோட்டம்

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானின் லாகூர் சஃபாரி (Lahore Safari) விலங்குத் தோட்டம் 12 சிங்கங்களை ஏலத்தில் விற்கவுள்ளது.

அதன் மூலம் இடப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதோடு, இறைச்சி வாங்கும் செலவும் குறையும் என்றார் தோட்டத்தின் துணை இயக்குநர் தன்வீர்  அஹ்மட் ஜஞ்சுவா (Ahmed Janjua).

ஆனால் சிங்கங்களுக்கு முறையான பராமரிப்பும் உணவும் அளிக்கக்கூடியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும்.

மேலும் அவர்கள் அதிகாரிகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.

அங்கு தற்போது 29 சிங்கங்கள் உள்ளன. 

அவற்றில் 2 வயதிலிருந்து 5 வயதுக்கு இடைப்பட்ட 12 சிங்கங்கள் வரும் வியாழக்கிழமை (11 ஆகஸ்ட்) ஏலத்தில் விடப்படும்.

போதுமான இடம் இல்லாததால், சிங்கங்களும் புலிகளும் வேலியால் அடைக்கப்பட்ட புல்வெளியை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டியிருப்பதாகத் திரு. தன்வீர் கூறினார்.

அங்கு 6 புலிகளும் 2 சிறுத்தைப்புலிகளும் உள்ளன.

சிங்கங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படும் என விலங்குத் தோட்ட அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆர்வலர்கள் ஏலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சிங்கங்கள் மற்ற விலங்கியல் தோட்டங்களுக்கு மாற்றப்பட வேண்டும் அல்லது பெண் சிங்கங்களுக்குக் கருத்தடை செய்ய வேண்டும் என உலக வனவிலங்கு நிதியம் (WWF) அமைப்பு தெரிவித்தது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்