ஆக நீளமான hong bao அன்பளிப்பு உறை - பேத்திக்குக் கொடுத்த தாத்தா

(கோப்புப் படம்: Jeremy Long/ CNA)
சீனாவில் சீனப் புத்தாண்டின்போது தாத்தா ஒருவர் 4 வயது பேத்திக்கு ஆக நீளமான hong bao அன்பளிப்பு உறையைக் கொடுத்துள்ளார்.
அதன் நீளம் 13 மீட்டர்.
அதிலிருந்த பணத்தின் மதிப்பு 8,800 யுவான் (1,706 வெள்ளி ).
அந்த அன்பளிப்பு உறை ஒரு வீட்டின் மாடியிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ள காணொளிக் காட்சி இணையத்தில் பரவிவருகிறது.
அந்த உறையைச் சிறுமி வீட்டு வாயிற்கதவு வரை இழுத்துச் செல்லும் காட்சியும் அதில் உண்டு.
சீனப் புத்தாண்டு என்றாலே குதூகலம். அதிலும் hong bao அன்பளிப்பு உறை கிடைத்ததில் சிறுமிக்கு மிக்க மகிழ்ச்சி என அவளது அத்தை கூறியுள்ளார்.
காணொளி இதுவரை 6.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.