Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சந்திரமுறைப் புத்தாண்டு - சீனாவில் குறைந்துள்ள குதூகலம்

வாசிப்புநேரம் -
சந்திரமுறைப் புத்தாண்டு - சீனாவில் குறைந்துள்ள குதூகலம்

படம்: NOEL CELIS / AFP

சீனாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

தலைநகர் பெய்ச்சிங்கில் வரும் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, அங்குக் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சீனாவில் நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்க அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கடுமையான தனிமைப்படுத்தும் விதிகளைப் பின்பற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சீனாவில் முற்றிலும் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு காலத்தில் சீன மக்களில் பலரும் சொந்த ஊருக்குச் செல்லாமல் அவர்கள் வேலை செய்யும் நகரங்களிலேயே தங்கியுள்ளனர். 

கிருமிப்பரவலுக்கு முந்திய காலத்தில் சீன மக்களில் மில்லியன் கணக்கானோர் குடும்பங்களுடன் ஒன்றுசேர, சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்