Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில்... அவரின் உடல் நலம் சீராக உள்ளது

வாசிப்புநேரம் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் மட்டும் அவர் இரு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

96 வயது டாக்டர் மகாதீருக்குக் கடந்த 2 நாளாக தேசிய இதய நிலையத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவரின் உடல்நிலை சீராய் இருப்பதாகவும் அவரது மகள் மரினா மகாதீர் தெரிவித்தார். 

இம்மாதம் (ஜனவரி 2022) 7ஆம் தேதி டாக்டர் மகாதீர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 13ஆம் தேதி வீடு திரும்பினார். அதற்கு முன்னர் சென்ற மாத (டிசம்பர் 2021) நடுப்பகுதியில் அவர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்