மலேசியாவின் புதிய பிரதமர் அன்வாரை வாழ்த்திய முன்னைய பிரதமர் மகாதீர்

(கோப்புப் படம்: AP/Vincent Thian)
மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமது (Mahathir Mohamad) புதிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
நாட்டின் 10ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துவதாக அவர் தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
75 வயது திரு அன்வார் நேற்று (24 நவம்பர்) பதவியேற்றார்.
பக்கத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, சபா மக்கள் கூட்டணி, சரவாக் கட்சிகள் கூட்டணி ஆகியவை இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கவிருப்பதாக அவர் கூறினார்.
அதையடுத்து நாடாளுமன்றத்தில் தமது அரசாங்கம் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மையைப் பெறும் என்றார் அவர்.
மேலும் அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திரு அன்வார் கூறினார்.
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்துப் பரிந்துரைத்துள்ளதாகவும் அதற்கு ஒப்புக்கொள்ளுமாறு அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-Reuters