Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பொதுத்தேர்தலில் மலேசிய மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன்......நான் அரசியலில் இருந்து விலக எண்ணுகிறேன்'- மகாதீர் முகமது

வாசிப்புநேரம் -

அரசியலில் இருந்து தாம் விலகக்கூடும் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் வரலாறு, அதன் வளர்ச்சி ஆகியவை குறித்து எழுதுவதில் இனி தாம் கவனம் செலுத்தப்போவதாக அவர் சொன்னார். 

பொதுத்தேர்தல் முடிவுகள் கவலையளித்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக டாக்டர் மகாதீர் சொன்னார்.

வெற்றிபெற்ற கூட்டணி மலேசியாவில் ஆட்சி அமைக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 

தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் தமது கருத்துகளை Tweeterரில் பதிவிட்டார்.

15ஆவது பொதுத்தேர்தலில் டாக்டர் மகாதீரின் பெஜூவாங் கட்சி (Pejuang) போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி கண்டது. மக்களவையில் எதிர்க்கட்சியாக நுழையக்கூட அக்கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனது.  

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்