நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் இயங்கவிருக்கும் விமானம்... மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம்
வாசிப்புநேரம் -

(படம்: AFP)
மலேசியா ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம், அதன் பயணிகள் விமானத்தில் முதன்முறையாக நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்தவிருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (5 ஜூன்) கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணத்தில் அது பயன்படுத்தப்படும்.
உலகச் சுற்றுப்புற தினத்தையொட்டி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் சொன்னது.
போயிங் 737-800 ரக விமானத்தில் வழக்கமான விமான எரிபொருளுடன் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய முறையில் தயாரிக்கப்பட்ட எரிபொருளும் கலந்து பயன்படுத்தப்படும்.
கழிவுகள், சமையல் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
கலப்பு எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை 80 விழுக்காடு வரை குறைக்கமுடியும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் கூறியது.