ஆசியா exclusive
ஓவியக் கண்காட்சி நடத்தும் 9 வயது வர்மா!
வாசிப்புநேரம் -
'autism' அதாவது தொடர்புதிறன் குறைபாடு...
சாதிக்க இந்தக் குறைபாடு ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துவருகிறார் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த 9 வயது ராஜேந்திர வர்மா.
வர்மாவுக்கு 3 வயதாகும்போது அவருக்குத் தொடர்புதிறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் பெற்றோர் 'செய்தி'இடம் தெரிவித்தனர்.
ஒருநாள் வீட்டின் சமையலறையில் இருந்த மஞ்சள்பொடியைத் தவறுதலாகக் கொட்டிவிட்ட வர்மா அதன்பிறகு அந்தப் பொடியின்மீது ஓவியங்கள் வரையத் தொடங்கினார்.
அந்தச் சம்பவம்தான் வர்மாவின் ஓவியக் கலைப் பயணத்துக்குத் தொடக்கமாக அமைந்தது.
இன்று வர்மாவின் ஓவியங்களில் சில கோலாலம்பூரிலுள்ள 2 மருத்துவமனைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வர்மா ஓவியக் கண்காட்சிகளும் நடத்திவருகிறார்.
வர்மாவின் ஓவியப் பயணம் பற்றி அவரின் பெற்றோரிடம் கேட்டறிந்தது 'செய்தி'.