Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய உயர் நீதிமன்றம் அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி மீதான வழக்குகளில் இன்று முடிவு

வாசிப்புநேரம் -
மலேசிய உயர் நீதிமன்றம் அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி மீதான வழக்குகளில் இன்று முடிவு

(படம்: Bernama)

மலேசிய உயர் நீதிமன்றம் அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி (Ahmad Zahid Hamidi) மீதான வழக்குகள்பற்றி இன்று முடிவெடுக்கவிருக்கிறது. வெளிநாட்டு விசா முறை தொடர்பில் திரு. அகமது ஸாஹித் 40 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். 

69 வயது திரு. அகமது ஸாஹித்  உள்துறை அமைச்சராக இருந்தபோது UKSB நிறுவனத்திடமிருந்து 9.6 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

அது நிரூபிக்கப்பட்டால் முன்னாள் துணைப் பிரதமரான அவருக்கு 20 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. 

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, ஊழல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மேலும் 47 குற்றச்சாட்டுகளும் திரு. அகமது ஸாஹித்மீது சுமத்தப்பட்டுள்ளன. 

தமக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டுகளும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று திரு. அகமது ஸாஹித் கூறினார். 

2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்த பிறகு தம் மீதும் அம்னோ தலைவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa