மலேசியாவில் திறக்கப்பட்ட பூனைகள் பூங்கா

pixabay
மலேசியாவின் சைபர்ஜயா (Cyberjaya) எனும் இடத்தில் பூனைகள் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் சுல்தான் அவர்களின் துணைவியார் அந்தப் பூங்காவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.
செப்பாங் (Sepang) வட்டாரத்தில் கைவிடப்பட்ட பூனைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்கத்தில் பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது ஹுசைன் (Abdul Hamid Hussain) தெரிவித்துள்ளார்.
பூனைகளைப் பராமரிக்கப் பகுதிநேரக் கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
ஆர்வமுள்ளோர் பூங்காவிலிருந்து பூனையைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும் அப்துல் ஹமீது சொன்னார்.
பூங்காவில் ஒரே நேரத்தில் சுமார் 300 பூனைகளைத் தங்க வைப்பதற்கான இட வசதி உண்டு. அலுவலகம், மருந்தகம், தீவிரச் சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைப் பிரிவு, மறுவாழ்வுப் பிரிவ முதலிய வசதிகளும் அங்குள்ளன.
பூனைகளைப் பராமரிக்க அந்த வட்டாரத்திலுள்ள பல்கலைக்கழக அல்லது கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்பு நாடப்படும் என்று திரு. அப்துல் ஹமீது கூறினார்.
- Bernama