Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"மலேசியாவில் கோழி விலை நிலைப்பட்டுள்ளது"

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கோழி விநியோகமும் விலையும் நிலைப்பட்டுள்ளதாகப்  பணவீக்கத்துக்கு எதிரான சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். 

அங்கு விற்கப்படும் பெரும்பாலான கோழிகளின் விலை, கிலோகிராமுக்கு 9 ரிங்கிட் 40 காசுக்கும் குறைவாக இருக்கிறது என்று அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. 

கோழி விற்பனையாளர்கள் பலரும்  1 கிலோகிராம் கோழியை 9 ரிங்கிட்டைவிட மிகக் குறைவான விலையில் விற்பதாகத் திரு. அனுவார் கூறினார். 

சென்ற மாதத் தொடக்கத்தில் (1 ஜூன்) மலேசிய அரசாங்கம், சுமார் 3.6 மில்லியன் கோழிகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது. விநியோக, விலை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பது அதன் நோக்கம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்