Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் ஜொகூரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் ஜொகூரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்

(படம்: AFP/Mohd Rasfan)

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

சட்டமன்றத்தைக் கலைக்க, முதல்வர் ஹஸ்னி முகமதும் ஜொகூர் சுல்தானும் சம்மதித்ததைத் தொடர்ந்து தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால், அடுத்த 60 நாள்களுக்குள் அதாவது மார்ச் 23ஆம் தேதியோ அதற்கு முன்போ தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

சென்ற மாதம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காலமானார்.

அதனை அடுத்து தேசிய முன்னணியின் தலைமையிலான அரசாங்கத்தின் பெரும்பான்மை ஒரே ஓர் இடமாகக் குறைந்தது.

3 மாத காலத்தில் மலாக்கா, சரவாக்கிற்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தலை நடத்தவிருக்கும் 3ஆவது மாநிலம், ஜொகூர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa