ஆசியா exclusive
மலேசியாவில் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் - "பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்குக் காத்திருக்கும் சவால்"
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Reuters/Hasnoor Hussain)
"மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது"
இதுதான் மலேசிய அரசியல் கவனிப்பாளர்கள் பொதுவாகக் கூறிவரும் அண்மைக் கருத்தாக இருக்கிறது.
மலேசியாவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இக்கருத்து எழுந்துள்ளது.
இந்தச் சட்டமன்றத் தேர்தல்கள் மலேசியப் பொருளியலையும் இதர சீர்த்திருத்தங்களையும் வழிநடத்துவதில் அவரது அரசாங்கத்தின் திறனை மதிப்பிடக்கூடிய களமாகவும் திகழும் என்று கவனிப்பாளார்கள் நம்புகின்றனர்.

"திரு. அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகின்றன. ஏற்கெனவே அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள தொய்வையும் சரிசெய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் அவர் இருக்கிறார்"
என்று "செய்தி"யிடம் தமது கருத்தைப் பகிர்ந்தார் அரசியல் பார்வையாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. ஜெயக்குமார்.
இதனைக் கருத்தில்கொண்டு திரு. அன்வாருக்குச் சற்றுக் கால அவகாசம் கொடுப்பது அவசியம் என்றார் திரு. ஜெயக்குமார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் இன, சமய நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தத் திரு. அன்வாரின் கூட்டணிக்கு வெற்றி தேவைப்படுகிறது என்றார் அவர்.
தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களில் 3 மாநிலங்கள் திரு. அன்வாரின் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் (Pakatan Harapan) கீழ் உள்ளன. சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகியவை அந்த மாநிலங்கள்.