Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் 1.74 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகை

வாசிப்புநேரம் -
மலேசியாவில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் 1.74 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகை

(Picture:AFP)

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob), குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு இந்த மாதத்திலிருந்து, 1.74 பில்லியன் ரிங்கிட் தொகை, பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

அதில், 630 மில்லியன் ரிங்கிட் ரொக்க உதவியும் அடங்கும். 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தையும் சமாளிக்க, அது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கூடுதல் ரொக்க உதவியின்மூலம், 4 மில்லியன் மலேசியக் குடும்பங்கள் பலன் அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து, ரொக்க உதவி தொடங்கும். 

இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து சமையல் எண்ணெய்க்கான சலுகைத்தொகை அதிகரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். 

நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், அவர் அந்த விவரங்களைத் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa