Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெள்ளத்தைச் சமாளிக்கும் நிலையில் பொதுமக்கள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்: ஜொகூர் அதிகாரிகள்

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தைச் சமாளிக்கும் நிலையில், ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என மக்களை மலேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வெள்ளத்தைச் சமாளிக்கும் நிலையில் பொதுமக்கள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்: ஜொகூர் அதிகாரிகள்

படம்: Twitter/Bernama

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தைச் சமாளிக்கும் நிலையில், ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என மக்களை மலேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தப் பேரிடரில் TikTok காணொளிகள் பதிவுசெய்வது, பிள்ளைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தானவை என்றும், அவ்வாறு செய்வதன்மூலம் மக்கள் தங்களது பாதுகாப்பை அலட்சியப்படுத்துகின்றனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நீரின் ஆழத்தையும், வெள்ளத்தின் சீற்றத்தையும் கணிக்க முடியாது என்பதால், பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

மலேசியாவில் பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அபாயகரமான அளவில் உள்ளது.

அடுத்த சில நாள்களுக்குக் கனத்த மழை தொடரும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்