Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய வெள்ளம் - பேரிடருக்கான மறுசீரமைப்புப் பணிகளுக்கு 1 பில்லியன் ரிங்கிட் செலவாகலாம்

மலேசியாவில் நிலவும் வெள்ளப் பேரிடருக்கான மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நிலவும் வெள்ளப் பேரிடருக்கான மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

சாலைகள், பாலங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகள் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

சேதத்தை மோசமாக்கக்கூடிய 2ஆம் கட்ட வெள்ளத்திற்கு நாடு தயாராகிறது.

கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களுக்குப் பலத்த காற்று, கனத்த மழை, அதிக உயரமான அலைகள் ஆகியவை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கை நிலை புதன்கிழமைவரை நடப்பில் இருக்கும்.

தேவைப்பட்டால் வீடுகளைவிட்டு வெளியேறுவதற்குத் தயாராக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் 7 மாநிலங்களில் வெள்ளம் பெருகியுள்ளது. அங்கு 3ஆம் வாரமாக கனத்த மழை பெய்கிறது.

125,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 9,000 பேர் நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்